15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஊசுடு தொகுதியில் 15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சாய்.சரவணன்குமார் வழங்கினார்.
15 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
Published on

வில்லியனூர்

ஊசுடு தொகுதிக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஊசுடு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது. விழாவில் அமைச்சர் சாய்.சரவணன்குமார் கலந்து கொண்டு 15 பயனாளிகளுக்கு இஸ்திரிபெட்டி, தவில், நாதஸ்வரம், முடி திருத்துவதற்கான சுழற்நாற்காலி ஆகியவற்றை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பா.ஜ.க. ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், ஆதிதிராவிடர் பொறுப்பாளர் ஜெகதலபிரதாபன் உள்பட தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com