என்ன சுனிதா இதெல்லாம்? - சினிமா துளிகள்

சமையல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சுனிதா, ஒரு புதிய படத்தில் லெஸ்பியனாக நடிக்கிறார்.
என்ன சுனிதா இதெல்லாம்? - சினிமா துளிகள்
Published on

பரட்டை நடிகரின் உறுதி

உடல் முழுவதும் சாமி கயிறு கட்டிக்கொண்டு வலம் வரும் அந்த பரட்டை தலை நடிகர், ஒரு நாளைக்கே ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறாராம். சமீபத்தில் தனது மேக்கப்மேனுக்கான சம்பளத்தை அவர் சரியாக வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் மேக்கப் மேன் கோபித்துக்கொண்டு போய்விட்டார். அவருக்கு பதிலாக புதிய மேக்கப்மேனை பரட்டை நடிகர் வேலைக்கு வைத்து கூடுதல் சம்பளம் தருவதாக உறுதியளித்துள்ளாராம்.

என்ன சுனிதா இதெல்லாம்? 

சின்னத்திரையில் சமையல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமான சுனிதா, ஒரு புதிய படத்தில் லெஸ்பியனாக நடிக்கிறார். அவர் இன்னொரு பெண்ணுக்கு உதட்டு முத்தம் தருவது போன்ற படத்தின் போஸ்டர்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் 'என்ன சுனிதா இதெல்லாம்? லெஸ்பியன் வேண்டாம்', என்று கண்டித்தும், இன்னும் சிலர் இந்த கோணத்திலும் உங்களை பார்க்க ஆசைப்படுகிறோம்', என்று ஆதரவு தெரிவித்தும் பதிவுகள் வெளியிடுகின்றனர்.

'பப்'பில் சபதம்

வாரிசு நடிகரும், ராசியான நடிகையும் நெருங்கிய நண்பர்கள் என்பது அனை வருக்கும் தெரியும். ஆனால் சமீபகாலமாக இருவரிடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக பேசப்பட்டது. இதனால் பல நாட்கள் பேசாமல் இருந்த அவர்கள் சமீபத்தில் பிரபல பப்பில் நடந்த நடன நிகழ்ச்சியில் சந்தித்து சண்டையை மறந்து கட்டிப்பிடித்து நலம் விசாரித்து கொண்டார் களாம். இனிமேல் இப்படி சண்டை போட்டுக் கொள்ளக்கூடாது என்று சபதமும் ஏற்றுக்கொண்டு `ஜூஸ்' குடித்தார்களாம்.

அழகை மறைத்து என்ன பயன்?

பாலிவுட் நடிகையான அனன்யா பாண்டே, சமீபத்தில் கலந்துகொண்ட பட விழாவில் அணிந்திருந்த படுகவர்ச்சியான உடை அனைவரையுமே உற்றுப்பார்க்க வைத்தது. இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். 'நடிகை களுக்கு அழகு முக்கியம். அதை மறைத்து என்ன ஆகப்போகிறது? வளரும் நடிகைகளுக்கு கவர்ச்சியும் ஒரு அணிகலன். கவர்ச்சி வேறு, ஆபாசம் வேறு. இரண்டும் கலக்கக்கூடாது அவ்வளவுதான். மற்றபடி ஒன்றும் தவறு கிடையாது', என்றார்.

எது உண்மையோ...

சின்னத்திரையில் 'பெரிய முதலாளி' ஷோவில் பங்கேற்ற அந்த 'கவி' நடிகரும், 'லியா' நடிகையும் காதலித்து வந்தனர். என்ன ஆனதோ...பிரிந்துவிட்டனர். நடிகர், சமீபத்தில் இன்னொரு பெண்ணை திருமணமும் செய்துகொண்டு விட்டார். இந்தநிலையில் நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'மகிழ்ச்சிதான் உண்மையான பழிவாங்கல் படலம்' என்று ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். நடிகரை தான் ஜாடைமாடையாக குத்திகாட்டியிருப்பதாக பலர் கிசுகிசுக்கிறார்கள். எது உண்மையோ...

நகைச்சுவை படத்தில் அமீர்கான்

சினிமாவுக்கு தற்காலிகமாக ஓய்வு கொடுத்திருக்கும் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கான், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு புதிய படத்தை தயாரித்து நடிக்கிறார். இது முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருக்க போகிறதாம். இந்த படத்தில் நடிக்க பாத்திமா சனா ஷேக்கை அவர் பரிந்துரை செய்திருக்கிறார். ஏற்கனவே இருவருக்கும் இடையே 'பழக்கம்' என்று கூறப்படும் நிலையில் புதிய படத்தில் இருவரும் இணைகிறார்கள்.

குறும்படம் எடுக்கும் கவர்ச்சி நடிகை

கவர்ச்சியின் எல்லை எது? என்று தொட்டுவிட நினைக்கும் அந்த `ஓ போடு' நடிகை, இப்போது ஒரு குறும்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். அந்த குறும்படத்தில் நடிக்க இளம்பெண்கள் தேவை என்றும் தனது ரகசிய ஆப் மூலமாக விளம்பரம் கொடுத்துள்ளாராம். இவரை நம்பி போகும் இளம்பெண்கள் என்ன கதி ஆகப்போகிறார்களோ... என்று திரையுலகினர் கிசுகிசுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com