ஆவுடையார்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை

கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவுடையார்கோவிலில் கணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆவுடையார்கோவில்:

ஆவுடையார்கோவிலை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பிரபு (வயது 30). இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறந்த துக்கம் தாங்க முடியாமல் அவரது மனைவி செல்வராணி என்கிற பிரியா (26) இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த செல்வராணி வீட்டில் இரவு தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வராணி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com