பரமத்திவேலூரில் பெண் தீக்குளித்து தற்கொலை

பரமத்திவேலூரில் பெண் தீக்குளித்து தற்கொலை
பரமத்திவேலூரில் பெண் தீக்குளித்து தற்கொலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் பாவடி தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மனைவி ஈஸ்வரி (வயது 45). குழந்தைகள் இல்லை. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கடந்த 2-ந் தேதி மீண்டும் அவர்களுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த ஈஸ்வரி சமையல் அறைக்கு சென்று திடீரென மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவியதில் ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈஸ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com