

நெல்லை:
நெல்லை சந்திப்பு மேகலிங்கபுரத்தை சேர்ந்தவர் பிச்சுமணி மனைவி சுப்புலட்சுமி (வயது 53). இவரது அண்ணன் கடந்த மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். அவர் மீது சுப்புலட்சுமி அதிக பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மிகுந்த மனவருத்தத்தில் இருந்ததாகவும், இதனால் சரிவர சாப்பிடாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுப்புலட்சுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.