தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் காயம்

மும்பை தாராவி பகுதியில் வீடு இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்தார்
தாராவியில் வீடு இடிந்து விழுந்து பெண் காயம்
Published on

மும்பை, 

மும்பை தாராவி 90 அடி சாலையில் உள்ள குடிசை மாடி வீடு ஒன்று நேற்று காலை 8.15 மணி அளவில் திடீரென இடிந்து விழுந்தது. இதனால் வீட்டின் இடிபாடுகளில் பெண் ஒருவர் சிக்கினார். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் அங்கு சென்று இடிபாடுகளில் சிக்கிய பெண்ணை மீட்டனர். காயமடைந்த அவரை சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி நடத்திய விசாரணையில் காயமடைந்த பெண் பிரியா செல்வராஜ் (வயது45) என தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடிந்து விழுந்த குடிசை வீட்டின் அருகே உள்ள 4 வீடுகள் காலி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com