ரெயிலை ஓட்டிய பெண்கள்

ரெயிலை இயக்கும் பெண் டிரைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. எனினும் சரக்கு ரெயில்களை பெண்கள் ஓட்டுவது கடினமான பணியாகவே கருதப்படுகிறது.
ரெயிலை ஓட்டிய பெண்கள்
Published on

பீகாரில் 3 பெண்கள், சரக்கு ரெயில் ஓட்டும் சவாலான பணியை மேற்கொண்டிருக் கிறார்கள். அவர்களில் சோனி குமார், விபா குமாரி இருவரும் டிரைவர்கள். கார்டுவாக சுவாதி ஸ்வரூப் என்ற பெண்மணி இயங்கி இருக்கிறார்.

இவர்கள் இயக்கிய சரக்கு ரெயில் தானாபூர் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாதுஹா யார்டு ரெயில் நிலையத்தை சென்றடைந்திருக்கிறது. 31 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த இரு பகுதி களையும் சரக்கு ரெயில் கடப்ப தற்கு ஒன்றரை மணி நேரமாகி இருக்கிறது. குறைந்த தொலைவு தான் என்றாலும் ஆங்காங்கே சிக்னல்களை சரியாக கவனித்து ரெயிலை நிறுத்தி இயக்குவது கடினமான விஷயமாக இருந் திருக்கிறது.

சில கிலோ மீட்டர் தூரத்தை கடப்பதற்குள் அடிக்கடி ரெயிலை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டாலும் மூன்று பெண் களும் சாதுரியமாக செயல்பட்டு பயணிகள் ரெயில்களுக்கு வழிவிட்டு சிறப்பாக பணியை நிறைவு செய்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com