கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

திருபுவனை அருகே கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

திருபுவனை

திருபுவனை அருகே உள்ள தமிழக பள்ளிநேலியனூர் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 45). கூலித்தொழிலாளி. அவரது மனைவி ஆனந்தவல்லி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ராஜாராமன் மதுபோதைக்கு அடிமையானார்.

திருபுவனை பெரியபேட் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வார். சம்பவத்தன்று அவர் குடித்து விட்டு பெரியபேட் பகுதிக்கு வந்தார். அப்போது அங்கு கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த திருபுவனை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com