மதுபோதைக்கு தொழிலாளி சாவு

புதுச்சேரியில் மதுபோதைக்கு தொழிலாளி உயரிழிப்பு, இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுபோதைக்கு தொழிலாளி சாவு
Published on

புதுச்சேரி

புதுவை வம்பாகீரப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது33). தொழிலாளி. அவருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று காலை விடிந்தும் எழும்பாமல் மயக்கத்தில் கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், செந்தில்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com