வேன் மோதி தொழிலாளி சாவு

கிருமாம்பாக்கத்தில் வேன் மோதி கூலி தொழிலாளி பரிதாமாக உயிரிழந்தார்.
வேன் மோதி தொழிலாளி சாவு
Published on

பாகூர்

கிருமாம்பாக்கம் வேணுகோபால்நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 60). கூலி தொழிலாளி. இவர் நேற்று, அதிகாலையில் கிருமாம்பாக்கம் சாய்பாபா கோவில் அருகில் கடலூர்-பாண்டி ரோட்டினை கடக்கும்போது அவ்வழியாக வந்த வேன் மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இது குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com