தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனார் கைது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் கர்ப்பம்

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் சிவலிங்கம் (வயது 21). கொத்தனார். இவர் அதே பகுதியில் உள்ள 17 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்தார்.

இந்த நிலையில் அந்த பெண்ணை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண் கர்ப்பம் ஆனார். இதுகுறித்து அவர் 1098 சைல்டு லைனுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

கைது

இதனையடுத்து சைல்டு லைனில் இருந்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சிவலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் இளம்பெண்ணை மீட்டு தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com