மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது
Published on

பந்தலூர்

பந்தலூர் தாலுக்கா எருமாடு அருகே பனஞ்சிறா பகுதியை சேர்ந்தவர் நாராயணண். இவருடையமனைவி இந்திரா (வயது 61). இவர் கடந்த 22ந் தேதி வீட்டில் தனியாக இருந்த போது கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க செயினை மர்ம ஆசாமி ஒருவர் பறித்துச்சென்றுவிட்டார். இதுகுறித்து நாராயணன் எருமாடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சித்ரா, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து ஆசாமியை தேடி வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜிபின் (வயது30) என்பவர்தான் மூதாட்டியிடம் நகை பறித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com