கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா

முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் யுவன் சங்கர் ராஜா, அடுத்ததாக கோமாளி பட இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார்.
கோமாளி இயக்குனரை சந்தித்த யுவன் சங்கர் ராஜா
Published on

ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் கோமாளி. இப்படத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். கோமாளி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com