ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் சம்மன்

மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் சம்மன்
Published on

மும்பை,

மும்பையை சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக், பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேசமயம், அவருக்கு சொந்தமான இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐ.ஆர்.எப்) மீதும் பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வெளிநாட்டில் இருக்கும் ஜாகிர் நாயக்கிற்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இருந்தாலும், அவர் பதில் அளிக்கவில்லை. இதையடுத்து, ஐ.ஆர்.எப். அறக்கட்டளை அதிகாரிகளிடம் அமலாக்க பிரிவினர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், ஜாகிர் நாயக்கிற்கு மீண்டும் புதிதாக ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com