குஜராத்தில் காங்கிரஸ் பின்பற்றுவது தற்கொலை பாதை- மூத்த தலைவர் வகேலா


குஜராத்தில் காங்கிரஸ் பின்பற்றுவது தற்கொலை பாதை- மூத்த தலைவர் வகேலா
x
தினத்தந்தி 24 Jun 2017 8:24 PM GMT (Updated: 24 Jun 2017 8:24 PM GMT)

குஜராத் மூத்த காங்கிரஸ் தலைவர் வகேலா மத்திய தலைமை மீது அதிருப்தி தெரிவித்துள்ளார்.

காந்திநகர்

இவ்வாண்டு தேர்தல் நடைபெறவுள்ள குஜராத்தில் காங்கிரஸ் மத்திய தலைமை மேற்கொண்டு வரும் ‘தற்கொலை பாதை’ யை பின்பற்றப்போவதில்லை என்று கூறினார் முன்னாள் முதல்வர் சங்கர்சிங் வகேலா.

தான் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றிக்காக உழைத்து கொண்டிருக்க இதரத் தலைவர்களோ தன்னை கட்சியை விட்டு வெளியேற்ற செயலாற்றிக் கொண்டுள்ளனர் என்றார் வகேலா.

காங்கிரஸ் கட்சிக்கு தொலை நோக்கு பார்வை கிடையாது என்று அவர் கூறினார். தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர், “ என்னுடைய வருத்தத்தை காங்கிரஸ் மேலிடத்திடம் தெரிவித்து விட்டேன். சிறு பிரயாணத்திற்கு கூட திட்டமிடுவோம். ஆனால் காங்கிரஸ் மேலிடம் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது என்பதை அறிந்து வைத்துள்ளதா என்று தெரியவில்லை. ஏ கே அந்தோணி குழுவின் அறிக்கையின்படி ஒரு வருடத்திற்கு முன்பே வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்; குறைந்தது ஆறு மாதம் முன்பாகவே அறிவிக்க வேண்டும். ஆனால் நீங்கள் தற்கொலைப்பாதையை தேர்வு செய்துள்ளீர்கள். நான் உங்கள் பாதையின் குறுக்கே வரவில்லை” என்றார் வகேலா.

ஜூலை மாதம் முதல் வாரம் ராகுல் இந்தியாவிற்கு திரும்பியவுடன் அவரை சந்தித்து பேசப்போவதாக வாகேலா தெரிவித்தார்.


Next Story