மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் 13–ந் தேதி முழு அடைப்பு


மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் 13–ந் தேதி முழு அடைப்பு
x
தினத்தந்தி 4 Oct 2017 10:30 PM GMT (Updated: 4 Oct 2017 8:53 PM GMT)

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கேரளாவில் 13–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூட்டணி அறிவித்துள்ளது.

கோழிக்கோடு,

கேரளாவில், பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பிரதான எதிர்க்கட்சி கூட்டணியாக உள்ளது.

இந்நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவரும், கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான ரமேஷ் சென்னிதாலா நேற்று மலப்புரம் மாவட்டம் வெங்காராவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, கேரளாவில் 13–ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்.

ஜி.எஸ்.டி. வரி அமலாக்கத்துக்கு பிறகும், பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் மாற்றி அமைக்கும் முறை அமலாக்கத்துக்கு பிறகும் மக்களுக்கு சொல்லொணா துயரம் ஏற்பட்டுள்ளது. விலைவாசி விண்ணை தொட்டுள்ளது. அதற்கு தீர்வு காண மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு அதல பாதாளத்துக்கு சென்று விட்டது. ஆகவே, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story