இது போன்ற ஒரு வெற்றி மிகச் சிறப்பான உணர்வை தருகிறது - கே.எல்.ராகுல் பேட்டி


இது போன்ற ஒரு வெற்றி மிகச் சிறப்பான உணர்வை தருகிறது - கே.எல்.ராகுல் பேட்டி
x

Image Courtesy: X (Twitter)

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 108 ரன்னும்,. ஷிவம் துபே 66 ரன்னும் எடுத்தனர். இதையடுத்து 211 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய லக்னோ மார்கஸ் ஸ்டோய்னிஸின் அதிரடி ஆட்டத்தால் 19.3 ஓவரில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 213 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

லக்னோ தரப்பில் அதிரடியாக ஆடிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்தில் 124 ரன்கள் குவித்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது,

உண்மையிலேயே இந்த போட்டி மிகவும் ஸ்பெஷலான ஒரு போட்டி. அதிலும் குறிப்பாக இது போன்ற ஒரு வெற்றி மிகச் சிறப்பான உணர்வை தருகிறது. இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் ரன் ஏதும் எடுக்காமலேயே முதல் விக்கெட்டை இழந்ததும் அதிலிருந்து மீண்டு வந்தது மிகச் சிறப்பாக இருந்தது. 170 முதல் 180 ரன்களில் சென்னை அணியை சுருட்டி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் சென்னை அணியின் வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்து 200 ரன்களை கடந்தனர்.

அதேபோன்று எங்களது அணியில் ஸ்டாய்னிஸ் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவர் பவர் ஹிட்டராக மட்டும் இல்லாமல் இந்த போட்டியில் அடிக்க வேண்டிய பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அடித்தார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் பயமற்ற ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன்.

அதன் காரணமாகவே பவர்பிளேவில் ஒரு விக்கெட் விழுந்த போதும் அவரை களம் இறக்கினோம். அந்த முடிவு மிகச் சரியான அமைந்துதோடு சேர்த்து எங்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தது. ஐ.பி.எல் டி20 கிரிக்கெட்டில் தற்போது இம்பேக்ட் விதிமுறை இருப்பது மேலும் பேட்டிங்கின் ஆழத்தை அதிகரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story