உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா–பாகிஸ்தான் இன்று மோதல்


உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று: இந்தியா–பாகிஸ்தான் இன்று மோதல்
x
தினத்தந்தி 23 Jun 2017 8:39 PM GMT (Updated: 23 Jun 2017 8:39 PM GMT)

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வி

லண்டன்,

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் கால்இறுதி ஆட்டத்தில் மலேசியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி, இன்று (சனிக்கிழமை) நடைபெறும் 5 முதல் 8 இடத்துக்கான ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. லீக் ஆட்டத்தில் இந்திய அணி 7–1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை பந்தாடி இருந்தது. அதற்கு பழிதீர்க்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. 5 முதல் 8 இடத்துக்கான மற்றொரு ஆட்டத்தில் கனடா–சீனா அணிகள் மோதுகின்றன. இதனை அடுத்து நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் அர்ஜென்டினா–மலேசியாவும், 2–வது அரைஇறுதிப்போட்டியில் இங்கிலாந்து–நெதர்லாந்து பலப்பரீட்சை நடத்துகின்றன.


Next Story