அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி


அகில இந்திய ஆக்கி: அரைஇறுதியில் இந்தியன் ரெயில்வே, பஞ்சாப் நே‌ஷனல் வங்கி
x
தினத்தந்தி 2 Aug 2017 8:51 PM GMT (Updated: 2 Aug 2017 8:51 PM GMT)

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

91–வது எம்.சி.சி.–முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 7–வது நாளான நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஆக்கி தமிழ்நாடு அணி 3–2 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியை தோற்கடித்து முதல் வெற்றியை ருசித்தது. தமிழக அணியில் வீர தமிழன் 2 கோலும், சரவணகுமார் ஒரு கோலும் அடித்தனர். பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி அணியில் ஜஸ்கரன்சிங், ககன் பிரீத்சிங் தலா ஒரு கோல் திருப்பினார்கள். மற்றொரு ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 4–2 என்ற கோல் கணக்கில் பாரத் பெட்ரோலியம் அணியை வீழ்த்தி 4–வது வெற்றியுடன் ‘ஏ’ பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இன்னொரு ஆட்டத்தில் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி அணி 3–0 என்ற கோல் கணக்கில் ராணுவ லெவன் அணியை சாய்த்து 4–வது வெற்றியை ருசித்து ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தது.

இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் ஓ.என்.ஜி.சி.–மத்திய தலைமை செயலகம் (பிற்பகல் 2.30 மணி), ஆக்கி தமிழ்நாடு–ஆக்கி பெங்களூரு (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story