மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்


மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
x

மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையின் போரிவலி (மேற்கு) பகுதியில் இன்று பிற்பகல் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. சாய்பாபா கோவில் அருகே சாய்பாபா நகரில் உள்ள கீதாஞ்சலி கட்டிடம் மதியம் 12.34 மணியளவில் இடிந்து விழுந்தது.

மும்பை மாநகராட்சி அதிகாரிகளால் பாழடைந்த கட்டிடம் என நோட்டீஸ் வழங்கப்பட்டு, யாரும் வசிக்கக் கூடாது எனக்கூறி முன்னதாகவே குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். இருந்தாலும் சிலர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பெருநகர தீயணைப்பு மற்றும் அவசரகால சேவை வாரியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணியை தொடங்கியுள்ளனர்.


Next Story