'துடிப்பான நகருக்கு வர ஆவலோடு உள்ளேன்'- மோடி டுவிட்டர் பதிவு
‘துடிப்பான நகருக்கு வர ஆவலோடு உள்ளேன்’ என்று பிரதமர் நரேந்திர மோடி பெங்களூரு பயணம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பெங்களூரு:
ஒரு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று(வெள்ளிக்கிழமை) பெங்களூரு வருகிறார். 3 முக்கியமான நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
நான் நாளை(இன்று) துடிப்பான நகரமான பெங்களூருவுக்கு வர ஆவலோடு உள்ளேன். நாடப்பிரபு கெம்பேகவுடா சிலையை திறந்து வைப்பதை கவுரவமாக கருதுகிறேன். வந்தேபாரத் அதிவிரைவு ரெயில், பாரத் கவுரவ் காசி யாத்திரை ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறேன். அத்துடன் கெம்பேகவுடா விமான நிலைய 2-வது முனையத்தை தொடங்கி வைக்க இருக்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story