செந்தில்பாலாஜி ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு


செந்தில்பாலாஜி ஜாமீன் மனு - அமலாக்கத்துறை பதிலளிக்க  உத்தரவு
x
தினத்தந்தி 3 Jan 2024 12:16 PM IST (Updated: 3 Jan 2024 12:33 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்த நிலையில், நீதிமன்றக்காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. பண பரிமாற்ற வழக்கில் தனக்கு எதிராக போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனு தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

1 More update

Next Story