விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்


விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல்
x
தினத்தந்தி 8 March 2018 10:15 PM GMT (Updated: 8 March 2018 7:19 PM GMT)

ஊழியர்களின் சம்பள பாக்கிக்காக விஜய் மல்லையாவின் சொகுசு கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது.

லண்டன்,

தொழில் அதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சி செய்து வருகிறது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள மால்டா தீவு நாட்டில் மல்லையாவுக்கு சொந்தமான ‘இந்தியன் எம்ப்ரஸ்’ என்ற சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டு உள்ளது. அதில் பணிபுரியும் 40–க்கும் அதிகமான ஊழியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. ரூ.6 கோடிக்கும் மேல் சம்பள பாக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மல்லையாவுடன் பேச்சுவார்த்தை நடந்த போதிலும் எந்த பலனும் இல்லை.

இதைத்தொடர்ந்து, மால்டா அதிகாரிகள் அந்த கப்பலை பறிமுதல் செய்து உள்ளனர். கோர்ட்டு மூலம் ஊழியர்களின் சம்பள பாக்கி உள்ளிட்ட தொகைகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அங்குள்ள தொழிற்சங்கம் தெரிவித்து உள்ளது.


Next Story