மேஜர் லீக் கிரிக்கெட்: டி காக் அதிரடி ஆட்டம்...டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சீட்டில் ஆர்கஸ்....!


மேஜர் லீக் கிரிக்கெட்: டி காக் அதிரடி ஆட்டம்...டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சீட்டில் ஆர்கஸ்....!
x

Image Courtesy: @MLCricket

தினத்தந்தி 28 July 2023 5:08 AM GMT (Updated: 31 July 2023 4:20 AM GMT)

டெக்சாஸ் அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டெக்சாஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

டெக்சாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுபிளெஸ்சிஸ் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 5 ரன், கான்வே 24 ரன் அடுத்து களம் இறங்கிய ஷெட்டி 24 ரன், மிலிந் குமார் 5 ரன், மில்லர் 16 ரன், சாண்ட்னெர் 2 ரன், டேனியல் சாம்ஸ் 26 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் டெக்சாஸ் அணி ரன் குவிக்க தடுமாறியது.

இறுதியில் டெக்சாஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களே சேர்த்தது. சியாட்டில் அணி தரப்பில் ஆண்ட்ரூ டை 3 விக்கெட், இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 127 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சீட்டில் ஆர்கஸ் அணி களம் இறங்கியது.

சீட்டில் ஆர்கஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக் மற்றும் நவுமன் அன்வர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் நவுமன் அன்வர் 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டி காக்குடன் ஜெயசூர்யா ஜோடி சேர்ந்தார். இந்த இணை மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்து கொண்டதோடு அதிரடியில் மிரட்டியது.

டி காக்கின் அதிரடியால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இறுதியில் சீட்டில் ஆர்கஸ் அணி 15 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 127 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

சீட்டில் ஆர்கஸ் அணி தரப்பில் டி காக் 50 பந்தில் 88 ரன் குவித்தார். முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியடைந்த போதும் லீக் சுற்றில் 2 ம் இடம் பிடித்ததால் இறுதிப்போட்டிக்குள் நுழைய டெக்சாஸ் அணிக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது.

அதன் படி 2 வது தகுதிச்சுற்று போட்டியில் எம்.ஐ. நியூயார்க் அணியை இன்று டெக்சாஸ் அணி எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்குள் முன்னேறும். இறுதிப்போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story