பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!


பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!
x

image courtesy; AFP

பாகிஸ்தான் அணி அடுத்ததாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

லாகூர்,

நடப்பு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் தலைமையில் களம் இறங்கியது. அதில் 9 லீக் ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தை பிடித்தது. இதனால் பாகிஸ்தான் அணியால் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

இந்த நிலையில் தோல்விக்கு பொறுப்பேற்கும் விதமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டனர். அதன்படி டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத்தும், டி20 அணிக்கு ஷாஹின் அப்ரிடியும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இயக்குனராக முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி அடுத்ததாக வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முகமது ஹபீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அணியின் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் பதவிகளை ஒன்றிணைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.


Next Story