சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்த மரம்

புதுவை 100 அடி ரோட்டில் சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்த மரத்தை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
சூறைக்காற்றில் சாய்ந்து விழுந்த மரம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரியில் நேற்று இரவு சூறைக்காற்று வீசியது. இதில் 100 அடி ரோட்டில் கல்வித்துறை அலுவலகத்திற்கு எதிரே மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த மரக்களையில் சாலையோரம் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் இன்று காலை உழவர்கரை நகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று மரங்களை துண்டு துண்டாக வெட்டி நகராட்சி வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

----

X

Daily Thanthi
www.dailythanthi.com