சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சற்று குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி (ஒரு சவரன் ரூ.97,600) புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 40-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 320-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.201-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,020-க்கும், சவரன் ரூ.96,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூபாய் ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.200-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்த்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.     

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

04.12.2025 ஒரு சவரன் ரூ.96,160 (இன்று)

03.12.2025 ஒரு சவரன் ரூ.96,480 (நேற்று)

02.12.2025 ஒரு சவரன் ரூ.96,320

01.12.2025 ஒரு சவரன் ரூ.96,560

30.11.2025 ஒரு சவரன் ரூ.95,840

29.11.2025 ஒரு சவரன் ரூ.95,840

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com