தூத்துக்குடியில் மனைவி இறந்ததால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.;
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பொன்ராஜ் நகரைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் காளிராஜன் (வயது 44), டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி இசக்கியம்மாளுக்கு(38) நேற்று காலை திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் மன வேதனை அடைந்த காளிராஜன் இன்று காலை தூத்துக்குடி மேல ரங்கநாதபுரத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.