ஐபிஎல்: ஐதராபாத் -மும்பை அணிகள் இன்று மோதல்

இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன;

Update:2025-04-23 05:45 IST

ஐதராபாத்,

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு (புதன்கிழமை) ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

ஐதராபாத் அணி 7 போட்டிகளில் 2 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. மும்பை அணி 8 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 4 தோல்வி என 8 புள்ளிகளுடன் 6-வது இடம் வகிக்கிறது. இவ்விரு அணிகளும் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 14-ல் மும்பையும், 10-ல் ஐதராபாத்தும் வென்று இருக்கின்றன.

இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்