மேஜர் லீக் கிரிக்கெட்; சூப்பர் கிங்ஸை வீழ்த்திய சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ்

சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் தரப்பில் பின் ஆலென் 78 ரன்கள் எடுத்தார்.
Image Courtesy: @MLCricket
Image Courtesy: @MLCricket
Published on

டல்லாஸ்,

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (இந்திய நேரப்படி இன்று) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் - சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 198 ரன்கள் எடுத்தது. சூப்பர் கிங்ஸ் தரப்பில் கேப்டன் டு பிளெஸ்சிஸ் சதம் அடித்து அசத்தினார்.

சான் பிரான்சிஸ்கோ தரப்பில் பார்ட்லெட், ஹாரிஸ் ரவூப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சான் பிரான்சிஸ்கோ அணி களம் கண்டது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலென் மற்றும் மேத்யூ ஷார்ட் களம் கண்டனர்.

இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் மேத்யூ ஷார் 61 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். தொடர்ந்து பிரேசர் மெக்கர்க் களம் கண்டார்.

இதில் பின் ஆலென் 78 ரன்னிலும், மெக்கர்க் 37 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஹசன் கான் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் சான் பிரான்சிஸ்கோ அணி 16.1 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 202 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com