வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்: 2ம் நாள் முடிவில் நியூசிலாந்து 32/0

வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.;

Update:2025-12-03 18:52 IST

கிறிஸ்ட்சர்ச்,

நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 5 டி20, 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் நியூசிலாந்து கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் நேற்று முன் தினம் தொடங்கியது. இதில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 231 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 167 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 67 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.

இந்நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 96 ரன்கள் முன்னிலையில் உள்ளது. நியூசிலாந்து அணியின் டாம் லாதம் 14 ரன்களிலும், கான்வே 15 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்