டி.என்.பி.எல்.: நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை அணிகள் இன்று மோதல்

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது.
Image Courtesy: @TNPremierLeague
Image Courtesy: @TNPremierLeague
Published on

சேலம்,

8 அணிகள் இடையிலான 9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 5-ந் தேதி தொடங்கியது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் நடந்து முடிந்தன.

இதனையடுத்து இந்த தொடரின் 2வது கட்ட லீக் ஆட்டங்கள் சேலத்தில் நடந்து வருகின்றன. இதில் இன்று ஒரு லீக் ஆட்டம் நடைபெறுகிறது. அதன்படி இரவு 7.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் நெல்லை அணி 3 ஆட்டங்களில் ஆடி (2 வெற்றி, 1 தோல்வி 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் மதுரை அணி 3 ஆட்டங்களில் ஆடி (1 வெற்றி, 2 தோல்வி 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com