முத்தரப்பு ஒருநாள் தொடர் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு
இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன.;
கராச்சி,
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து (4 புள்ளி), பாகிஸ்தான் (2 புள்ளி) அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தென் ஆப்பிரிக்கா(2 ஆட்டத்திலும் தோல்வி) வெளியேறியது.
இதனையடுத்து கராச்சி தேசிய ஸ்டேடியத்தில் இன்று அரங்கேறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரிஸ்வான் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி நியூசிலாந்து முதலில் பந்து வீச உள்ளது.