மும்பை

ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருள் அழிப்பு

ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருளை மும்பை போலீசார் அழித்தனர்.

தினத்தந்தி

மும்பை, 

ரூ.12 கோடி மதிப்பிலான 1,000 கிலோ போதைப்பொருளை மும்பை போலீசார் அழித்தனர்.

1,000 கிலோ போதைப்பொருள்

நிதிதலைநகரான மும்பையில் போதைப்பொருளை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மும்பைக்கு அதிகளவில் போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது. போதைப்பொருள் கும்பலை கண்காணித்து போலீசார் அவர்களிடம் உள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் 201 வழக்குகளில் 1,000 கிலோ போதை பொருளை பறிமுதல் செய்து உள்ளனர்.

குப்பை கிடங்கில் அழிப்பு

அந்த போதை பொருட்களை போலீசார் நேற்று முன்தினம் அழித்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுமார் 201 வழக்குகள் தொடர்புடைய 1,000 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கொகைன், ஹெராயின், எம்.டி., கஞ்சா போன்ற ரூ.12 கோடி மதிப்புள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள் உயர் அதிகாரிகள் முன்னிலையில் ராய்காட் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் அழிக்கப்பட்டது" என்றா.

..............

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை