புதுச்சேரி

கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

காரைக்காலில் கஞ்கா விற்ற 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

காரைக்கால்

காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் காரைக்கால் ரெயில்வே கேட் அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசாரை பார்த்ததும் 4 வாலிபர்கள் ஓட்டம்பிடித்தனர். அவர்களை போலீசார் சிறிது தூரம் விரட்டிச்சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை சோதனை செய்தபோது 220 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். அவர்கள் கோவில்பத்து பகுதியை சேர்ந்த சிவானந்தம் (வயது 27), கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த ஹரிஹரன் (22), சூர்யா (23), பாபநாசத்தைச் சேர்ந்த அய்யப்பன் (26) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது