முன்னோட்டம்

ஜோதிகாவின் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல்!

ஜோதிகாவின் புதிய படத்தில் கார்த்தி ஜோடியாக நிகிலா விமல் நடிக்கிறார்கள். மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார்.

தினத்தந்தி

ஜோதிகா நடிக்கும் புதிய படத்தில், அவருடன் மைத்துனர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். இருவரும் அக்காள்-தம்பி வேடங்களில் நடிக்கிறார்கள்., படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மலையாள டைரக்டர் ஜீத்து ஜோசப் டைரக்டு செய்கிறார். இவர், கமல்ஹாசன் நடித்த `பாபநாசம்` படத்தை இயக்கியவர்.

ஜோதிகா-கார்த்தியுடன் சத்யராஜ், சீதா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கார்த்தி ஜோடியாக நடிக்க கதாநாயகி வேட்டை நடந்தது. இப்போது, அது முடிவாகி விட்டது. கதாநாயகியாக நிகிலா விமல் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. அதைத்தொடர்ந்து கோவாவில் படம் வளர்ந்தது. இப்போது, ஊட்டியில் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

திகில், அதிரடி சண்டை காட்சிகள் கலந்து, குடும்ப உறவுகளின் மேன்மையை சித்தரிக்கும் படம், இது. சூரஜ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு