சினிமா துளிகள்

சித் ஸ்ரீராமை பாராட்டிய அல்லு அர்ஜுன்

தமிழ் தெலுங்கு என பல மொழி ரசிகர்களை தன்னுடைய குரலின் மூலம் கவர்ந்திருக்கும் பாடகர் சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து சுகுமார் இயக்கிய புஷ்பா திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், தனஞ்செயா, அஜய், ராவ் ரமேஷ் போன்ற பலர் நடித்திருந்தனர். தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. நடிகை சமந்தா நடனமாடிய 'ஊ சொல்றியா மாமா' என்ற பாடல் சில சலசலப்பையும் உருவாகியிருந்தது. அப்படத்தில் இடம்பெற்ற 'ஸ்ரீவல்லி' பாடலை பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருந்தார். இந்த பாடலை பாடிய பாடகர் சித் ஸ்ரீராமை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

அந்த பதில், எனது சகோதரர் சித் ஸ்ரீராம் ஒரு நிகழ்வில் 'ஸ்ரீவல்லி' பாடலை மேடையில் பாட தொடங்கினார். அவரது குரலுக்கு பின்னணியில் இசைக்கருவிகள் வாசிக்கப்படும் என்று நான் ஆர்வமுடன் காத்திருந்தேன். ஆனால் அவ்வாறு எதுவும் பின்னணியில் இசைக்கப்படவில்லை, அவர் குரல் மட்டுமே ஒலித்தது. எவ்வித இசைக்கருவிகளும் இல்லாமல் அவர் பாடியதை கேட்டு நான் அந்த இசை வெள்ளத்தில் மிதந்தேன். இவர் குரலில் ஏதோ மாயம் உள்ளது என்பது மட்டும் எனக்குள் ஓடிக்கொண்டு இருந்தது. இவருக்கு இசை தேவையில்லை, இவரே ஒரு இசைதான்" என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்