புதுச்சேரி

மேலும் ஒரு வாலிபர் கைது

வெடிகுண்டு வீச்சு வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

மாகி

மாகி பள்ளூரை சேர்ந்த சஜீஸ் கடந்த மாதம் 26-ந்தேதி தனது மகளின் பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது இவரது வீட்டருகே பள்ளிக்கூட மைதானத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இவர் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவரை மிரட்டும் விதமாக வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாகி போலீசார் ஜிஷ்ணு என்ற சோட்டு (வயது 24), முகமது சம்சீர், நிஷாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் முகமது சம்சீரை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இந்தநிலையில் ஜிஷ்ணு என்ற சோட்டுவையும் இன்ஸ்பெக்டர் சேகர் கைது செய்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்