புதுச்சேரி

பி.எஸ்.என்.எல் சிம் காடு விற்பனை முகாம்

புதுவையில் பி.எஸ்.என்.எல் சிம் காடு விற்பனை முகாம் நாளை முதல் தொடங்கி 3 நாட்கள் நடைபெறகிறது.

தினத்தந்தி

புதுச்சோ

புதுச்சேரி பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் சிம் கார்டு விற்பனை சிறப்பு முகாம் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த முகாம் மேட்டுப்பாளையம், வில்லியனூர், ஏம்பலம் எம்.எல்.ஏ. அலுவலகம் எதிரில், காலாப்பட்டு முருகன் கோவில் அருகில், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு இந்தியன் வங்கி அருகில், மடுகரை, அரும்பார்த்தபுரம், வில்லியனூர் பைபாஸ் எம்.ஜி.ஆர். சிலை அருகில் மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி நிலைய அலுவலகம், எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.

இந்த சிறப்பு முகாமில் ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல். 4-ஜி சிம் கார்டு ரூ.50-க்கு வழங்கப்படுகிறது. முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசிக்கொள்ளலாம். மேலும் தினசரி 2ஜி.பி. டேட்டா, 100 எஸ்.எம்.எஸ். இலவசம். இதர நெட்வொர்க்கில் இருந்து பி.எஸ்.என்.எல். நெட்வொர்க்கிற்கு இலவசமாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் அதிவேக இண்டாநெட் பாரத் பைபா நுழைவு பிளான் ரூ.329-க்கு வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை புதுச்சேரி பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு