தங்கம்

தங்கம் விலை குறைந்தது.. இன்றைய நிலவரம் என்ன.?

ஆபரணத்தங்கம் விலை நேற்று அதிகரித்து இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது.

நேற்று தங்கம் விலை காலையில் பவுனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,17,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.1,16,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்றைய வெள்ளி விலை

சென்னையில் இன்று விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.3,00,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.