

சென்னை,
தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமும், இறக்கமுமாக இருந்து வருகிறது. கடந்த 29-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.16,800 ஆக அதிகரித்திருந்தது. அதன்பின் விலை இறங்குவதும், ஏறுவதுமாக இருந்தது.
கடந்த ஓரிரு நாட்களாக விலை குறைந்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்தது. நேற்று பவுனுக்கு ரூ..4,640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,560க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.580 குறைந்து ரூ.14,320க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் விலை
இந்தநிலையில் சென்னையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, ஆபரணத்தகம் விலை பவுனுக்கு ரூ.1,600 குறைந்து ஒரு பவுன் ரூ.1,12,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.14,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.20,000 உயர்ந்து ரூ.2,80,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.