தங்கம் விலை கடந்த மாதம் (டிசம்பர்) 15-ந்தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. அதன் பின்னர் விலை குறைந்த நிலையில், அதே மாதம் 22-ந்தேதியில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் பயணித்தது. கடந்த மாதம் 28-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, பிறகு விறுவிறுவென இறங்கியது. அப்படியாக விலை குறைந்து வந்து, கடந்த ஒரு வாரமாக மீண்டும் ஏற்றத்திலேயே தங்கம் விலை இருந்து வருகிறது.
நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,06,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.50 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று உயர்ந்தது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.4,000 அதிகரித்து, ரூ.3,10,000-க்கும், கிராமுக்கு ரூ.4 அதிகரித்து. ஒரு கிராம் ரூ.310-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,360 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.170 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.13,450-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ. 8,000 அதிகரித்து, ரூ.3,18,000-க்கும், கிராமுக்கு ரூ.8அதிகரித்து. ஒரு கிராம் ரூ.318-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
1 கிராம்
1 சவரன்
1 கிலோ
1 கிராம்
19.01.2026
ரூ.13,450
ரூ.1,07,600
ரூ.3,18,000
ரூ.318
18.01.2026
ரூ.13,280
ரூ.1,06,240
ரூ.3,10,000
ரூ.310
17.01.2026
ரூ.13,280
ரூ.1,06,240
ரூ.3,10,000
ரூ.310
16.01.2026
ரூ.13,230
ரூ.1,05,840
ரூ.306,000
ரூ.306
15.01.2026
ரூ.13,290
ரூ.1,06,320
ரூ.310,000
ரூ.310