தங்கம்

தொடர்ந்து ஏற்ற, இறக்கத்தில் தங்கம் விலை.. என்ன காரணம்..?

தங்கம் விலை நேற்று காலையில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்து, மாலையில் ரூ.2 ஆயிரம் உயர்ந்தது.

சென்னை,

தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 775-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்து 200 என்ற உச்சத்தில் இருந்தது. அதன் பின்னர் விலை குறையத் தொடங்கியது. கடந்த 12-ந்தேதியில் இருந்து அதிரடியாக சரிந்து வருகிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் காலையில் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து, பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.5.360 உயர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

நேற்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.340-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம் குறைந்து இருந்தது. இதனையடுத்து மாலையில் திடீரென்று கிராமுக்கு ரூ.250-ம். சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து காணப்பட்டது. மொத்தத்தில் நேற்று முன்தினம் விலையை விட, நேற்று கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில், நேற்று காலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்தநிலையில், மாலையில் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்த நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கும், கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ. 260-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்திற்கு என்ன காரணம்..?

தங்கம் விலை ஒரே நாளில் காலையில் உயர்ந்து, மாலையில் குறைவது குறித்து நிபுணர்கள் கூறுகையில், “பொதுவாக உலக சந்தையில் தங்கம் ஆசிய சந்தைகளின் நிலவரத்தை பொறுத்து காலை விலையும், ஐரோப்பியா மற்றும் அமெரிக்க சந்தைகள் நிலவரத்தை கொண்டு மாலை விலையும் இருக்கும். இங்கு ஏற்படும் பெரிய மாற்றங்கள், பொருளாதார அறிவிப்புகள் காரணமாக விலை உயரவோ, குறையவோ வாய்ப்புள்ளது. அந்தவகையில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் டாலர் குறியீடு சற்று பலவீனமடைந்ததால், மற்ற நாட்டு பணங்கள் மூலம் தங்கம் வாங்குவது மலிவாகிறது. இதனால் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்து விலை அதிகரிக்கிறாது” என்று தெரிவித்தனர்.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

25.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,800 (இன்று)

24.03.2026 ஒரு சவரன் ரூ. 1,06,000 (நேற்று)

23.03.2026 ஒரு சவரன் ரூ. 1,06,720

22.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960

21.03.2026 ஒரு சவரன் ரூ. 1,08,960

20.03.2026 ஒரு சவரன் ரூ. 1,11,600