சென்னை,
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்தநிலையில், நேற்று ரூ.1,800 உயர்ந்தது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தங்கம், வெள்ளி விலை கிடு கிடு உயர்வை கண்டது.
இந்தநிலையில், இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சவரனுக்கு ரூ. 920 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25, 280-க்கும் கிராமுக்கு ரூ. 115 குறைந்து, ஒரு கிராம் ரூ.15,660-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ரூ.315-க்கும், ஒரு கிலோ ரூ.3,15, 000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்:-
02.03.2026 ரூ.1,25, 280
01.03.2026 ரூ.1,26,200
28.02.2026 - ரூ.1,24,400
27.02.2026 -ரூ. 1,19,200
26.02.2026 - ரூ.1,19,360