

சென்னை,
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் ரூ.5,200 உயர்ந்தநிலையில், இன்று ரூ.1,800 உயர்ந்துள்ளது. 2 நாட்களில் மட்டும் ரூ.7000 உயர்ந்துள்ளது.
நேற்று காலை சென்னையில், தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1, 21, 600-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15, 200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பிற்பகலில் 2-வது முறையாக அதிகரித்தது. சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,24,400-க்கும் கிராமுக்கு ரூ.350 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,550-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.320-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்தநிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் ரூ.1,26,200-க்கும் கிராமுக்கு ரூ.225 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,775-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.325-க்கும், ஒரு கிலோ ரூ.3,25,000 விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தங்கம், வெள்ளி விலை கிடு கிடு உயர்வை கண்டுள்ளது.
கடந்த 5 நாட்களில் தங்கம் விலை (ஒரு சவரன்) நிலவரம்
01.03.2026 - ரூ.1,26,200
28.02.2026 - ரூ.1,24,400
27.02.2026 - ரூ. 1,19,200
26.02.2026 - ரூ.1,19,360
25.02.2026 - ரூ.19,440