மும்பை

மும்பை, தானேயில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

மும்பை, தானேயில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

தானேயில் இன்று பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

ஏரிகளின் நீர்மட்டம்

மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று நகரில் மிதமான மழை பெய்தது. மழை காரணமாக நகரில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மின்சார ரெயில் வழக்கம் போல இயக்கப்பட்டது. பெஸ்ட் பஸ் சேவையிலும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் நகர்பகுதியில் 5.8 செ.மீ., கிழக்கு புறநகரில் 6.9 செ.மீ., மேற்கு புறநகரில் 7 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. தொடர் மழை காரணமாக மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் 52.84 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

பலத்த மழைக்கு வாய்ப்பு

இந்தநிலையில் இன்று மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. நகருக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தானே, ராய்காட் மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கும், ரத்னகிரி, சிந்துதுர்க், புனே, கோலாப்பூர், சத்தாரா மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு