சினிமா

’பிடிக்கலனா ‘நோ’ தான்... அதனால் பல வாய்ப்புகளை இழந்தேன்’ - “காஸ்டிங் கவுச்’-ஐ சாடிய நடிகை

நடிகை ஜோதியின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

ஐதராபாத்,

தெலுங்கு திரைப்பட நடிகை ஜோதி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக காஸ்டிங் கவுச் குறித்து அவர் வெளிப்படையாக கூறிய கருத்துகள் பெரும் கவனம் பெற்றுள்ளன.

அவர் பேசுகையில், “ஒரு கதாபாத்திரத்திற்கான தேர்வு, நடிகர்களின் திறமையை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டும்; தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல. தனிப்பட்ட விஷயங்களை தொழிலுடன் சேர்க்கக் கூடாது,” என்று கூறினார்.

மேலும், “எனக்கு பிடித்தது என்றால் ‘பிடிக்கும்’ என்று சொல்வேன்; பிடிக்கவில்லை என்றால் ‘பிடிக்கவில்லை’ என்று சொல்வேன்,” என்றார். இதனால் சில வாய்ப்புகளை இழந்ததையும் அவர் வெளிப்படையாக பகிர்ந்தார். சிலர் இதை பார்த்து கதாபாத்திரங்கள் வழங்க தயங்குவதாகவும் கூறினார்.

மேலும், “ நீங்களே(பெண்கள்) உங்களுக்காக நிற்காட்டால், உங்கள் பலவீனங்களை பயன்படுத்த முயல்வார்கள். அதனால் தைரியமாக இருங்கள்,” என்றார். ஜோதியின் இந்த கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

SCROLL FOR NEXT