சினிமா செய்திகள்

மீண்டும் கசிந்த விஜய் படப்பிடிப்பு வீடியோ

'வாரிசு' படத்தின் இன்னொரு படப்பிடிப்பு வீடியோவும் தற்போது கசிந்துள்ளது.

விஜய் நடிக்கும் வாரிசு படப்பிடிப்பு புகைப்படங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த படப்பிடிப்பை சிலர் திருட்டுத்தனமாக படம்பிடித்து வலைத்தளத்தில் பரவ விட்டனர். பின்னர் பைக்கில் வரும் வில்லனை விஜய் கீழே தள்ளிவிட்டு சண்டையிடும் புகைப்படம் வெளியானது. தொடர்ந்து விஜய் கோட் சூட் அணிந்து தொழிலாளர்களுடன் பேசுவது போன்ற புகைப்படமும் பாடல் காட்சி படமாக்கப்பட்டபோது எடுத்த வீடியோவும் வலைதளங்களில் கசிந்து வைரல் ஆனது. இந்த நிலையில் 'வாரிசு' படத்தின் இன்னொரு படப்பிடிப்பு வீடியோவும் தற்போது கசிந்துள்ளது. அந்த வீடியோவில் விஜய் ஸ்டைலாக நடந்து வரும் காட்சிகளும் ஒரு சுரங்கத்தின் அருகில் ஹெலிகாப்டர் ஒன்று இருக்கும் காட்சியும் உள்ளன. இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இது படக் குழுவினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. காட்சிகளை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்டது யார் என்று விசாரணை நடக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்