சினிமா செய்திகள்

தனுஷ் நடிக்கும் 'திருச்சிற்றம்பலம்' படத்தின் 4-வது பாடல் - இன்று வெளியீடு

அனிரூத் இசையில் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ள ‘தேன்மொழி’ என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது.

சென்னை,

யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். திருச்சிற்றம்பலம் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் அனிரூத் இசையில், இப்படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் 4-வது பாடலாக 'தேன்மொழி' என்ற பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்