சினிமா செய்திகள்

படப்பிடிப்புக்கு முன்பே...சாதனை படைத்த அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் படம்

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

தினத்தந்தி

சென்னை,

அல்லு அர்ஜுன் - இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஒரு சிறப்பு வீடியோ மூலம் வெளியான இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புஷ்பா படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், இந்தப் படத்தையும் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்னரே, இப்படம் ஒரு புது சாதனையை படைத்துள்ளது. படத்தின் தீம் இசையை வைத்து இன்ஸ்டாகிராமில் பல ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 3,55,000க்கும் மேற்பட்ட ரீல்ஸ்கள் உருவாகியுள்ளது. இதன் மூலம் படத்தின் தீம் இசையை பயன்படுத்தி உருவாகிய அதிகபட்ச ரீல்ஸ்களுக்கான சாதனையை இந்த படம் படைத்துள்ளது. 

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை வளர்ச்சிக்கான பார்வை கொண்டது: துணை ஜனாதிபதி

அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி

அஜித் பவார், ஜியா மறைவுக்கு மக்களவையில் இரங்கல்; நாள் முழுமைக்கும் அவை ஒத்தி வைப்பு

அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி

மலையேற்றத்தின்போது இளைஞர் உயிரிழப்பு: எஜமானரின் உடலை 3 நாட்கள் பாதுகாத்த செல்லப்பிராணி நாய்